தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் கட்டடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார் பேட்டி

சென்னை சில்க்ஸ் கட்டடம் அரசு சார்பில் இடிக்கப்படும்: அமைச்சர் உதயகுமார் பேட்டி

webteam

தி.நகரில் தீ விபத்திற்குள்ளாகியுள்ள சென்னை சில்க்ஸ் கட்டடம் தமிழக அரசின் சார்பில் இடித்து தரைமட்டமாக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டடம் தமிழக அரசின் சார்பின் இடிக்கப்படும். அருகிலுள்ள கட்டடங்களுக்கு எந்தவித சேதாரமும் இல்லாமல், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பது குறித்து ஆராய குழு அமைப்பு அமைக்கப்படும். பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் தலைமையில் 5 உறுப்பினர்கள் இந்த ஆய்வை மேற்கொள்வர் என்றார்.

தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் நேற்று காலை ஏற்பட்ட தீயை தற்போது வரை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். கிட்டத்தட்ட 450-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயில் பல கோடி மதிப்புள்ள துணிகள், பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.