தமிழ்நாடு

தரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம்

தரைமட்டமானது சென்னை சில்க்ஸ் கட்டடம்

webteam

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 21 நாட்களுக்குப்பிறகு இ‌ன்று இடிக்கப்பட்டது. 
முதல் 2 தளங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிரதான இடிப்பு பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக, ஒப்பந்ததாரர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு இறுதிகட்ட இடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கட்டடத்தின் ‌மிகவும் சிக்கலான பகுதியை இடிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். அதன்பின் ஜா கட்டர் இயந்திரத்தின் உதவியுடன் மாலை ஐந்தரை மணியளவில் கட்டடம் இடிக்கப்பட்டது. இடிப்புப்பணிகளின்போது அருகில் இருந்த கட்டடங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. கட்டட கழிவுகள் ஒரு வாரத்திற்குள் அகற்றப்படும் என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரவு 7 மணி அளவில் உஸ்மான் சாலை ‌மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கடந்த மே 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தை அடுத்து 2 ஆம் தேதி இடிப்பு பணிகள் தொடங்கியது.