தமிழ்நாடு

தீப்பிடித்த சென்னை சில்க்ஸ்... சேதம் ரூ.300 கோடியைத் தாண்டும்?

தீப்பிடித்த சென்னை சில்க்ஸ்... சேதம் ரூ.300 கோடியைத் தாண்டும்?

webteam

தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் உள்ளே தோராயமாக 400 கிலோ தங்கம் மற்றும் 2,000 கிலோ வெள்ளி இருந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், ரூ.20 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தீ விபத்தில் எரிந்த துணிகளின் மதிப்பு மட்டும் ரூ.80 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், மொத்த சேதம் ரூ.300 கோடியைத் தாண்டும் என்றும் தோராயமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. தீ விபத்தால் கட்டடத்தில் 150 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருந்ததால், பாதுகாப்புப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும் நகை தயாரிப்பாளர்கள் கணித்துள்ளனர். சென்னை சில்க்ஸ் கடையில் இருந்த பொருட்களை கடையின் உரிமையாளர்கள் ரூ.200 கோடி அளவுக்கு காப்பீடு செய்திருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.