சென்னை எம்கேபி நகரில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி மாநகர பேருந்து 2ஏ. நேற்று யானைகவுனி வால்டாக்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது நிறுத்தத்தில் நின்றி பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் பேருந்தின் கம்பியை பிடித்து தொங்கியபடி சாலையில் கால்களை தேய்த்துக் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பேருந்தில் இருந்த பயணிகளும், ஓட்டுனரும் கண்டித்துள்ளார். 'நாங்கள் அப்படித்தான் செய்வோம்' என்று வாக்குவாதம் செய்து பள்ளி மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர். பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நேற்று புரசைவாக்கம் பகுதியில் இதேபோல் பேருந்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை கண்டித்த பேருந்து ஓட்டுனர் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் நடந்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.