தமிழ்நாடு

முதல்வர், துணை முதல்வர் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா ஆதரவு போஸ்டர்கள்!

முதல்வர், துணை முதல்வர் வசிக்கும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சசிகலா ஆதரவு போஸ்டர்கள்!

kaleelrahman

முதல்வர், துணை முதல்வர் குடியிருப்பு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைதண்டனை பெற்ற சசிகலா, தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். தனது உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் இருந்த சசிகலா தமிழகத்துக்கு வராமல் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

சசிகலா வரும் 8ஆம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சசிகலாவின் ஆதரவாளர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக பலர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இருந்த போதும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் முதல்வர், துணைமுதல்வர் குடியிருப்பு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் 'எங்கள் ராஜமாதாவே! வருக! வருக!' என்றும், 'தமிழகம் அதிரும்ல.. எடுத்த சபதம் முடிப்பேன்' போன்ற வாசகங்களோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.