தமிழ்நாடு

ஊரடங்கு எதிரொலி: சென்னையில் மூடப்பட்ட சில பாலங்கள்!!

webteam

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பல பாலங்கள் மூடப்பட்டுள்ளன. முக்கியமான பாலங்கள் மட்டுமே
திறக்கப்பட்டுள்ளன

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்திய அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா தொடர்பாக நாட்டு மக்களிடையே நேற்று பேசிய மோடி, " மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். ஒருவருக்கு தெரியாமலேயே கொரோனா அவரை தொற்றக்கூடும், கவனமாக இருங்கள். காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது எனத் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அடுத்து சென்னையில் சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. பல இடங்களில் போலீசார்
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையின் பல மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜெமினி, கத்திப்பாரா, கோயம்பேடு, கோடம்பாக்கம் போன்ற முக்கியமான மேம்பாலங்கள் தவிர மற்ற பல மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. வடபழனி பாலம் மூடப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாடு மிகக்குறைவாக உள்ள காரணத்தால் தேவையற்ற மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிகிறது.