தமிழ்நாடு

சென்னையில் குறைந்து வரும் காற்று மாசு

சென்னையில் குறைந்து வரும் காற்று மாசு

jagadeesh

சென்னையில் கடந்த சில தினங்களாக அதிகரித்துக் காணப்பட்ட காற்று மாசு இன்று வெகுவாக குறைந்துள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று ஆலந்தூரில் 90 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு இன்று காலை 59 ஆக குறைந்திருந்தது. காற்றின் தரக்குறியீடு 78 ஆக‌ இருந்த வேளச்சேரி பகுதியில் இன்று 63ஆக குறைந்தது. மணலி பகுதியில் 85 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு 78ஆக குறைந்தது.

தரக்குறியீடு 50க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்றதாகக் கருதப்படும் சூழலில், தற்போது காற்றின் தரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது.