தமிழ்நாடு

சென்னை: வாகன சோதனையில் பிடிபட்ட ரூ. 1.54 கோடி: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

சென்னை: வாகன சோதனையில் பிடிபட்ட ரூ. 1.54 கோடி: ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

kaleelrahman

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுபோதையில் யாரேனும் வாகனங்களை ஓட்டுகிறார்களா என கொடுங்கையூரில் போக்குவரத்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில், ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். சந்தேகமடைந்த காவல்துறையினர், காரை சோதனை செய்தனர்.

அப்போது, அதில், ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்துகின்றனர். ஹவாலா பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.