தமிழ்நாடு

‘கொரோனா வடிவில் கேக்..’ : சென்னையில் பட்டாகத்தியுடன் ரவுடிகள் அட்டூழியம்..!

webteam

சென்னை பள்ளிக்கரணை அருகே பட்டா கத்தியால் கொரோனா வைரஸ் டிசைனில் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டி ரவுடிகள் அட்டூழியம் செய்தனர்.

சென்னை பள்ளிகரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரில் கடந்த 5ஆம் தேதி ஃபரூக் என்ற ரவுடி அரிவாளால் கொரோனா உருவம் வரையப்பட்ட கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். உடன் கோட்டூர்புரத்தை சேர்ந்த ரவுடிகள், மவுண்ட் ரோடு, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவுடிகளும் ஒன்று சேர்ந்து பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.

இதில் ஃபரூக் என்பவர் மீது பள்ளிகரணை, சேலையூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோன்று பப்ளு (எ) மெகபூல் மீது செம்மஞ்சேரி, பள்ளிகரணை ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அதில் சிந்தாதரிபேட்டையை சேர்ந்த திவாகர், சைதாப்பேட்டையை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிகரணை எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 5ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. ஆனால் கடந்த 18ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு மட்டும் 5 பேரை கைது செய்துள்ளனர். முதலில் நடந்த சம்பவத்திற்கு யாரும் கைது செய்யப்படாதது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிகரணை போலீசாரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, கேக் வெட்டியவர்களை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.