Chennai city web
தமிழ்நாடு

உலக அளவில் சிறந்த நகரங்கள்| டாப் 1000-ல் இடம்பிடித்த 8 தமிழ்நாடு நகரங்கள்!

உலக அளவில் சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 360வது இடத்தை பெற்றுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ந.பாலவெற்றி வேல்

உலக அளவில் சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 360 வது இடத்தை பெற்றுள்ளது. முதல் ஆயிரம் இடங்களுக்குள் திருச்சி, மதுரை, கோவை, வேலூர் உள்ளிட்ட எட்டு நகரங்கள் தமிழ்நாட்டில் இடம் பிடித்துள்ளன.

ஆக்ஸ்போர்டு பொருளாதார உலக நகரங்களின் பட்டியலில் 223வது இடத்தோடு இந்தியாவில் முதல் இடத்தை டெல்லி பெற்றுள்ளது.

முதல் 1000 இடத்தில் 8 தமிழ்நாடு நகரங்கள்!

உலக அளவில் சிறந்த நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்டு பொருளாதார ஆய்வு குழு வருடம் தோறும் வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த வருடம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முதல் 10 இடங்களை வளர்ந்த நாடுகளின் நகரங்களில் பெற்றுள்ளது.

பொருளாதாரம், தனிநபர் வருமானம், மகிழ்ச்சியான வாழ்க்கை, சுற்றுச்சூழல், ஆட்சி நிர்வாகம் உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையில் பூமி பந்தில் உள்ள ஆயிரம் நகரங்களில் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் இந்த வருடம் தமிழ்நாட்டில் எட்டு நகரங்கள் ஆயிரம் இடத்திற்குள் இடம்பெற்றுள்ளது. தலைநகர் சென்னை 360 ஆவது இடத்திலும் அதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை, உள்ளிட்ட நகரங்கள் தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் சிறந்த நகரங்கள் - இடம்

சென்னை-360

திருச்சி-496

மதுரை-556

கோயம்புத்தூர்-580

வேலூர்-593

சேலம்-638

திருப்பூர்-684

ஈரோடு-702