தமிழ்நாடு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

webteam

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடகிழக்கு நோக்கி நகர்கிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.