கனமழை காரணமாக சென்னையில் இன்று நடக்கவிருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் இன்றைய தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.