புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம் முகநூல்
தமிழ்நாடு

சென்னையில் இரவு 1 மணியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்

PT WEB

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இரவு ஒரு மணியுடன் நிறைவு செய்யுமாறு சென்னை பெருநகர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீதும், இருசக்கர வாகனங்களில் விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து காவல்துறை சார்பில் விளக்கப்பட்டது. அதில், ”புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொண்டாட்டங்களை கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்தப்படும். இரவு ஒரு மணியை தாண்டி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .

மது குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவோர் மீது வழக்கமான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் சிறப்பு வகுப்பில் பங்கேற்க வேண்டியது இருக்கும். இதற்காக 20 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 173 வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்படும். அவற்றில் 33 சாவடிகள் இருசக்கர வாகன பந்தயத்தை தடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

43 முக்கிய சாலைகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் . 48 தற்காலிக காவல்துறை பூத்-கள் அமைக்கப்படும். எனவே அசம்பாவிதங்களை படம் பிடித்து உடனே எச்சரிக்கும் 6 ஆயிரத்து 841 கேமராக்கள் பயன்படுத்தப்படவிருக்கிறது” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.