தமிழ்நாடு

ஊரடங்கில் வெளியே சுற்றிய இளைஞர்கள் : சென்னை போலீஸின் நூதன தண்டனை

ஊரடங்கில் வெளியே சுற்றிய இளைஞர்கள் : சென்னை போலீஸின் நூதன தண்டனை

webteam

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய இளைஞர்களுக்கு சென்னை போலீஸார் ‘டம்பளர் நீர்’ எனும் நூதன தண்டனை வழங்கினர்.

சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து, பொது இடங்களில் யாரும் சுற்றக்கூடாது என போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு அனுமதித்த நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு சந்திப்பில் துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், ஊர் சுற்றித் திரிந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு ஒரு டம்ளரில் இருந்து ஸ்பூன் மூலம் இன்னொரு டம்ளரில் நீரை நிரப்பும் நூதன தண்டனை வழங்கப்பட்டது. மேலும், டம்ளரில் நீரை நிரப்பும் வரை வீட்டிலிருந்து வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறிய படி இளைஞர்கள் டம்ளரில் நீரை நிரப்பினர்.