தமிழ்நாடு

போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகள் அகற்றம் - ட்விட்டர் பதிவுக்கு சென்னை போலீஸ் பதில்

webteam

போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து ட்விட்டரில் ஒரு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்த செடிகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர்.

சென்னை அண்ணா சாலை ஸ்பெஷல் பிளாசா எதிரே உள்ள காயிதே மில்லத் கல்லூரி அருகே அமைந்துள்ள பாதசாரிகள் நடைமேடையில் அளவுக்கு அதிகமாக வளர்ந்த செடிகளால் மக்கள் நடந்துசெல்ல மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறி சென்னை போக்குவரத்து காவல்துறையை டேக் செய்து ட்விட்டரில் ஒரு பதிவு செய்யப்பட்டது.

இந்த பதிவினைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவலர்கள், நடைமேடையில் அளவுக்கு அதிகமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றி பொதுமக்கள் எளிமையாக செல்லும் வகையில் சுத்தம் செய்து கொடுத்து புகார் தெரிவித்த ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.