தமிழ்நாடு

வாக்கை பதிவு செய்தார் சென்னை காவல் ஆணையர்

வாக்கை பதிவு செய்தார் சென்னை காவல் ஆணையர்

webteam

சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தனது வாக்கினை பதிவு செய்தார்.

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ்புரத்தில் உள்ள பெருநகர சென்னை நடுநிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி 175வது மையத்தில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தனது வாக்கை பதிவு செய்தார். மனைவி, மகளுடன் சேர்ந்து வாக்களித்தார். துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை குட்ஷெப்பர்டு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கைப்பதிவு செய்தார். தனது மனைவியுடன் சேர்ந்து வாக்களித்தார்.