தமிழ்நாடு

சென்னை: பள்ளி மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு - போலீசார் விசாரணை

சென்னை: பள்ளி மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு - போலீசார் விசாரணை

kaleelrahman

சென்னை: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, தேவநேசன் நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (39), இவரது, மனைவி கௌரி (35), இவர்களது 12 வயது மகள் ஜெனிபர் சேலையூரில் உள்ள, தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், ஜெனிபர் கடந்த இரண்டு நாட்களாக, வயிற்று வலியால் அவதிப்பட்டு, பள்ளிக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை அவரது, பாட்டி கன்னியம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த, ஜெனிபர் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதையடுத்து வெளியே சென்றிருந்த கன்னியம்மாள், மாலை, 5:00 மணிக்கு திரும்பி வீட்டிற்கு வந்தபோது, கதவு திறக்காததால் வீட்டில் உள்ளவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

ஆப்போது ஜெனிபர் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.