மழை, வெள்ளம் சார்ந்த புகார்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க பொதுமக்களுக்கு உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழைநீர் தேக்கம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க, 1913 என்ற எண்ணிலும், 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் 9445477205 என்ற எண் மூலமாக வாட்ஸ்அப் வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.