செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர், பணி நிமித்தமாக தினந்தோறும் ஆவடி வழியாக அம்பத்தூருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று பணி நிமித்தமாக பெரியபாளையத்தில் இருந்து ஆவடி வீராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கீழே சாலையில் விழுந்து சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து அவரை மீட்ட பொதுமக்கள் போலீசார் உதவியுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.