தமிழ்நாடு

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு

kaleelrahman

சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளை அகற்றப் போவதாக அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கவுள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் உள்ள வீடுகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

அதன் அடிப்படியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு படிவம் 7-ஐ கொடுக்க போலீசார் பாதுகாப்புடன் பெத்தேல்நகர் பகுதிக்கு வரவுள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.