தமிழ்நாடு

எச்சரிக்கையை மீறி செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

எச்சரிக்கையை மீறி செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

Rasus

பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் செவிலியர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்த செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒருதரப்பு செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆனால் மற்றொரு தரப்பு செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணை 191-ஐ வெளியிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக்கூறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் இன்று முதல் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  இதனிடையே, செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கிராமப்புற மருத்துவ சேவை இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான எச்சரிக்கை பலகை டிஎம்எஸ் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனைக் கண்டுகொள்ளாத செவிலியர்கள் தங்களது போராட்டத்தை தீவிரமாக்கியுள்ளனர்.