சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் விநியோக சர்வரில் ஏற்பட்ட பழுது சீர்செய்யப்பட்டது.
சென்னை மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் விநியோக சர்வரில் இன்று காலை திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகளுக்கு டிக்கெட் இல்லாமல் இலவசமாக மெட்ரோவில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகள் இலவசமாக பயணம் செய்தனர்.
அதேநேரத்தில் பழுதை சீர்செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டது. சுமார் 3 மணி நேரத்திற்குப் பின் டிக்கெட் விநிநோக சர்வரில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. அதன்பின் பயணிகள் பணம் கொடுத்து டிக்கெட் பெற்று பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.