தமிழ்நாடு

மீனம்பாக்கம் - வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் ? - பட்ஜெட் அறிவிப்பு

மீனம்பாக்கம் - வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் ? - பட்ஜெட் அறிவிப்பு

webteam

மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் (வண்டலூர்) இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், மீனம்பாக்கம் மற்றும் வண்டலூர் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்தை ஆய்வு செய்யவுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தற்போது செண்ட்ரல் முதல் மீனம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் செல்கிறது. இதனை நீட்டித்து மீனம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயிலை இயக்க தற்போது ஆய்வு செய்யவுள்ளது. 

இதுமட்டுமின்றி, போக்குவரத்து தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், “ மாசற்ற மின்சார பஸ்களை போக்குவரத்து துறையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடன் உதவியுடன் ரூ.5890 கோடி செலவில் 12 ஆயிரம் புதிய பிஎஸ்-6 தரத்திலான பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். 2000 மின்சார பஸ்கள் வாங்கி பயன்படுத்தப்படும் திட்டம் செயல்படுத்தப்படும். 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை, கோவையில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்” என அறிவித்தார். போக்குவரத்துறைக்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் ரூ.1297.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.