தமிழ்நாடு

மெட்ரோ அட்டை மூலமே பார்க்கிங் கட்டணம்.. செப்.1-ல் அமலாகிறது..!

webteam

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த, மெட்ரோ பயண அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயண அட்டை மூலமாக மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்தும் முறை ஜூலை மாதம் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. இக்கட்டணம் செலுத்தும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தினால் பொதுமக்கள் சிக்கல்களை சந்திக்க‌ நேரிடும் என்பதால் தற்போது மேலும் ஒரு மாத காலத்திற்கு சோதனை முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி இம்மாதம் 31ஆம் தேதி வரை சோதனை முறை அமலில் இருக்கும். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ பயண அட்டை மூலமாக மட்டுமே இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வரும். மெட்ரோ பயண அட்டை இல்லாதவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுத்த சேவை மையங்களிலோ அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ பயண அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.