தமிழ்நாடு

8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

webteam

தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் பகுதியில் உள்ள Amphan புயலால் வட மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது. சென்னையில் பரவலாக நேற்றிரவு மழை பெய்தது. பம்மல் உள்ளிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்தது. கனமழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதேபோல், காஞ்சிபுரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, வந்தவாசி சாலை, உத்தரமேரூர் சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் திருத்தணி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாக்குமரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.