தமிழ்நாடு

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

webteam

தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தமிழகத்தில் மக்களை ஒருபுறம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மறுபுறம் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். மழை பெய்தால்தான் தண்ணீர் என்பதால் மழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வப்போது தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும், போதுமான கோடை மழை பெய்யவில்லை. 

ஒரு பலமான மழை பெய்தால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற மனநிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் வானிலை மையம் கூறியுள்ளது. இப்பகுதிகளில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம்‌ சிறிது மேகமூட்டத்துடன் கா‌ணப்படும் என்றும், அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.