தமிழ்நாடு

சனிக்கிழமைக்குப் பிறகு புயல் - எச்சரிக்கும் வானிலை மையம்

சனிக்கிழமைக்குப் பிறகு புயல் - எச்சரிக்கும் வானிலை மையம்

webteam

தென்கிழக்கு அரபிக்கடலில் அக்டோபர் 6ஆம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்புள்ளதா‌க சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அக்டோபர் 6ஆம் தேதிக்கு பிறகு தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் அக்டோபர் 5ஆம் தேதியே கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்‌ என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மணல்மேல்குடி, தக்கலையில் அதிகளவாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.