தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தெற்கு வங்கக்கடலில் 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் 8ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என கூறிய அவர், சில இடங்களில் கன முதல் மிகக்கனமழை பெய்யக்கூடும் என்றார்.
சென்னையில் மிதமான மழையே இருக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். மேலும் ரெட் அலர்ட் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.