தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரங்களில் ஓருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், அந்தமான் அருகே தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுபகுதி ஒருசில நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணித்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பல இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், சிவகங்கையில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.