மேயர் பிரியாராஜன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

பணிக்குத் திரும்பிய மேயர் பிரியா.. புதிய ஆட்சி அமைந்த பின் முதன்முறையாக வருகை!

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா, முதலமைச்சரைச் சந்திக்கவில்லை.

Prakash J

கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசுப் பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பிறகு இன்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார்.

திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் பிரியாராஜன், சென்னை மாநகராட்சியின் மேயராக உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராக ஆட்சி அமைத்துள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா, முதலமைச்சரைச் சந்திக்கவும் இல்லை, பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் இல்லை.

மேலும் கடந்த 6ஆம் தேதி முதல் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தேர்தல் பணி முடிந்து வழக்கமான பணிக்குத் திரும்பி உள்ளனர். ஆனால், கடந்த 20 நாட்களுக்கு மேலாக அரசுப் பணிக்குத் திரும்பாத மேயர் பிரியாராஜன், நீண்ட ஓய்வுக்குப் பிறகு இன்று ரிப்பன்மாளிகை வந்து அலுவல் பணியைத் தொடங்கினார். சென்னை மாநகராட்சியின் 75ஆவது ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள சமீரன் ஐஏஎஸ் மேயர் பிரியா ராஜனைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.