சென்னையில் டிஜிபி அலுவலகப் பகுதியில் 30 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், மெரினா கடற்கரை வெள்ள நீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவு தொடங்கி விடியற்காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் மெரினா கடற்கரை கடல் மட்டத்திற்கு நீர் சூழந்து காட்சி அளிக்கிறது. கடல் பகுதி என்பதால் மழை நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.