சமீபத்தில் நடந்த சிஎஸ்கே ஆர்சிபி அணிக்களுக்கிடையே போட்டிக்கு பிறகு, மது போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்களின் சக நண்பர் மீது நடத்திய தாக்குதலில், தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எதற்கு தாக்குதல் நடத்தப்பட்டது ? பார்க்கலாம்.
வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் என்கிற ஜீவா (26). இவரது நண்பர்தான் அப்பு. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஆர்சிபி vs சிஎஸ்கே இடையேயான போட்டியை அப்புவின் வீட்டில் பார்க்கலாம் என்ற முடிவு செய்துள்ளனர் அப்புவின் நண்பர்கள் சிலர். இதன்படி 5 க்கும் மேற்பட்ட நண்பர்கள் சேர்ந்து அப்புவின் வீட்டிற்கு வந்தனர்.
ஒன்றாக அமர்ந்து மேட்சை பார்த்த இவர்கள் அனைவரும் , மது அருந்த தொடங்கியுள்ளனர். அப்போது அப்புவிற்கு போன் செய்த அவரது மனைவி, வேலையிலிருந்து தன்னை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.
அப்பு மது போதையிலிருந்ததால், தனது மனைவியை வாகனத்தில் அழைத்துவரும்படி, ஜீவாவிடம் கூறியுள்ளார். அழைக்க சென்ற ஜீவா, அப்புவின் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்புவின் மனைவி இதுகுறித்து அப்புவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பு, ஐபிஎஸ் காண வீட்டிற்கு வந்த மற்ற நண்பர்களிடம் இது குறித்து தெரிவித்தநிலையில், ஜீவாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.
நண்பர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து ஜீவை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஜீவாவை சரமாறியாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். இதனையடுத்து, அந்த கும்பல் அவ்விடத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் ஜீவாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், குற்றத்தை செய்த அப்பு (24), கோகுல் (25), ஜெகதீஷ் (25), அஜய் (20), ரமேஷ் (28) ஆகியோரை அடையாளம் கண்டறிந்த துரைப்பாக்கம் காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றக்காவலில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.