சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் சென்னையில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் உட்பட சென்னையில் மொத்தம் 24,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று மட்டும் சென்னையில் 1000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
- ஐ.டி. நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் (அதிகப்பட்சம் 80 பேர்) இயங்கலாம். ஊழியர்களுக்கு ஐ.டி. நிறுவனங்களே வாகன வசதி ஏற்பாடு செய்ய
வேண்டும்
- அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம்.
- அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் (ஜவுளி மற்றும் நகைக் கடைகள்) 50% தொழிலாளர்களுடன் காலை 10 மணி முதல்
மாலை 6 மணி வரை செயல்படலாம் (வணிக வளாகங்களை தவிர்த்து)
- காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கலாம்
- உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உணவுகளை பார்சல் வழங்கலாம். ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு உணவினை இரவு 9
மணி வரை கொண்டு கொடுக்கலாம். உணவு டெலிவரி செய்பவர்கள் நிறுவனத்தின் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்
- முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் ஏ.சி. போடாமல் இயங்கலாம். மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் சமூக இடைவெளியை
கடைபிடித்து இயங்கலாம்.
- டாக்சிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள்
ரிக்ஷாக்களுக்கும் அனுமதி
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கான தளர்வுகள்:
- அனைத்து வகையான தொழிற்சாலைகளும், ஏற்றுமதி நிறுவனங்களும் 100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம். தனியார் நிறுவனங்கள்
100 சதவீதம் தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
- ஐ.டி. நிறுவனங்கள் 100% தொழிலாளர்களுடன் இயங்கலாம். அதில், குறைந்தபட்சம் 20% வீடுகளில் இருந்து பணிகளை மேற்கொள்ளலாம்
- அனைத்து வகையான ஷோரூம்கள், பெரிய கடைகள் ஏ.சி. இயக்காமல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். 5 வாடிக்கையாளரே ஒரு
நேரத்தில் கடைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். (வணிக வளாகங்களை தவிர்த்து )
- டீ கடைகள், உணவகங்கள் மொத்த இருக்கையில் 50% இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் செயல்படலாம்
- டாக்சிகளில் ஓட்டுநர் தவிர்த்து 3 நபர்கள் பயணிக்கலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம். சைக்கிள்
ரிக்ஷாக்களுக்கும் அனுமதி
- மீன் கடைகள், இறைச்சி கடைகள், முட்டை கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கலாம்.