கோயம்பேட்டில் ஆயுத பூஜைக்கு கடைபோட்டுள்ள சிறு வியாபாரிகளிடம் நாளொன்றுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆயுத பூஜை போன்ற விழாக் காலங்களின் போது சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் சிறு கடைகள் வியாபாரம் களைகட்டும். இதனால் விழாக்காலங்கள் என்றாலே கோயம்பேட்டில் சிறுகடைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். இவ்வாறு அமைக்கப்படும் கடைகளுக்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட பண்டிகைக்காக, பூக்கள், வாழை தோரணங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சிறுவியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர். ஆனால், மழை காரணமாக மக்கள் வரத்து குறைந்து, வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.