தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் வெடித்து உயிருக்குப் போராடிய 4 பேர் பலி

கேஸ் சிலிண்டர் வெடித்து உயிருக்குப் போராடிய 4 பேர் பலி

webteam

சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் கடந்த 22 ஆம் தேதி சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ரயில்வே ஊழியர் பிரகாஷ், அவரது மனைவி கீதா, மகன், மகள் ஆகியோர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மனைவி கீதா 23 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து பிரகாஷின் மகன் கிஷோர் மற்றும் ‌மகள் ஷர்மிளா ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இன்று பிரகாஷும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் உயிரிழந்த சம்பவம், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.