தடம் புரண்ட சரக்கு ரயில்
தடம் புரண்ட சரக்கு ரயில்  pt desk
தமிழ்நாடு

சென்னை - ஜோலார்பேட்டை: இயல்பு நிலைக்கு திரும்பிய ரயில் சேவை - தெற்கு ரயில்வே

webteam

தெற்கு ரயில்வே சென்னை டிவிசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயிலின் (Goods train) பதினேழாவது வேகனில் (wagon) Hot axle கண்டறியப்பட்டதன் காரணமாக, பாதுகாப்பு கருதி அந்த சரக்கு ரயில் கேத்தண்டப்பட்டி ரயில் நிலையம் அருகே இன்று (14.04.2024) மாலை 5:30 மணிக்கு நிறுத்தப்பட்டது. முன்னதாக ரயில் தடம் புரண்டதாக வெளியான தகவலை தெற்கு ரயில்வே மறுத்துள்ளது.

தடம் புரண்ட சரக்கு ரயில்

இதன் விளைவாக, 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, இன்று மாலை 7:40 மணியளவில் சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது என தெரிவித்துள்ளது.