accident கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை | பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்து - ஐ.டி ஊழியர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஐ.டி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (27), இவர், கூடுவாஞ்சேரியில் தனது நண்பர்களுடன் தங்கி ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார், இந்நிலையில்,நற்று இரவு தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிகனல் அருகே தனது பைக்கில் சென்றுள்ளார். அப்போது தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியுள்ளது.

Death

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகன் மீது பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார், தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.