தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு; அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு

சென்னை ஐஐடியில் 71 பேருக்கு கொரோனா பாதிப்பு; அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு

webteam

விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. அங்கு 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. சென்னையில் அதிக அளவில் கொரோனா பரவக்கூடிய இடமாக ஐஐடி மாறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

விடுதிகளில் வசிக்கும் 774 மாணவர்களில் இதுவரை 408 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை ஐஐடி 10 சதவீத மாணவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.