தமிழ்நாடு

பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை

பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருள்: சென்னை ஐஐடி புதிய சாதனை

webteam

உலகிற்கு பெரும் சவாலாக விளங்க கூடிய பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கி உள்ளனர்.

அழிக்க முடியாத பிளாஸ்டிக்குகள் உலகின் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை கொண்டு எரிபொருள் தயாரித்துள்ளனர் சென்னை ஐஐடி மாணவர்கள்.  மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை சிறுசிறு துகள்களாக்கி, அதனை ஆக்சிஜன் இல்லாத சூழலில் 300 முதல் 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தபட வேண்டும். அப்படி வெப்பப்படுத்தப்படுபோது வெளியேறும் பைராலிசிஸ் எனப்படும் தெர்மோ வேதியியல் செயல் முறை மூலம் பிளாஸ்டிகிலிருந்து இந்த எரிபொருள் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக்கில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணையை தொழிற்சாலைகளில் உள்ள உலைக்கலன்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்யுடன் டீசல் கலந்து ஜெனரேட்டர் உள்ளிட்ட இயந்திரத்தை இயக்க முடியுமா என்பதற்கான ஆராய்ச்சிகளும் தொடர்ந்து  நடந்து வருகின்றன. 

கையாள எளிமையான முறையில் உள்ள இந்த மொபைல் பிளாஸ்டிக் பைராலிசி அலகினை கிராமப்புறங்களிலும் எளிதாக அமைக்க முடியும் என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பின்றியும் பெரிய அளவில் போக்குவரத்து செலவு இன்றியும் குறைந்த செலவில் எளிதாக பிளாஸ்டிக்கில் இருந்து எரிபொருளை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடந்த 5 ஆம் தேதி டெல்லியில் நடந்த ஜூரோ கார்பன் சேலஞ் 2019 என்ற பெயரில் நடந்த போட்டியில் மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து இருக்கும் இச்சூழலில் தெர்மோ வேதியியல் செயல் முறை மூலம் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருள் எண்ணெய்யாக மாற்றும் இச்சாதனை மாணவர்களின் கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது.