கணவன் பேச்சை மீறி உறவினர் நிகழ்ச்சிக்கு மனைவி சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை மதுரவாயல், சக்கரபாணி நகர், 14வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (31), இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று அரக்கோணத்தில் உள்ள ரம்யாவின் உறவினரின் வீட்டில் நடந்த காரிய நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என மனைவி ரம்யா கணவரிடம் கேட்டதாகவும் உறவினர் நிகழ்ச்சிக்கு செல்லக் கூடாது என கணவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கணவரின் பேச்சை மீறிய ரம்யா, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அரக்கோணத்திற்கு சென்று விட்டார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து சந்திரசேகர் மது போதையில் வீட்டிலேயே இருந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது சந்திரசேகர் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)