தமிழ்நாடு

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ் 

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ் 

webteam

கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்று இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என்ற கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. 

கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன என்ற கருத்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வழக்குக்கும், கருத்துக்கும் தொடர்பில்லை என கிறிஸ்தவ கல்லூரி தரப்பில் முன் வைக்கப்பட்ட முறையீட்டை ஏற்று கருத்தை நீக்கினார் நீதிபதி வைத்தியநாதன். 

முன்னதாக, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் கருத்து நிலவுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நன்னெறியை போதிக்கிறதா என்றால் அது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.