தமிழ்நாடு

உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து திமுக வழக்கு: உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து திமுக வழக்கு: உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

Rasus

சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், இதில் அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டிய மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைக்குள் புகையிலைப் பொருட்களையும் எடுத்துச் சென்றார். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

நோட்டீசுக்கு விளக்கமளிப்பதற்கான கெடு முடிவடைந்த போதிலும், திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதனிடையே, உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் நேற்று முன்தினம் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாத்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளார்.