தமிழ்நாடு

நீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறியது ஏன்?: சென்னை உயர்நீதிமன்றம்

Rasus

முதுநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி அரசு மருத்துவ கோவிந்தராஜன் உள்ளிட்ட 13 மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள், குலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் ராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுக்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக அரசு தற்போது சம்மதிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

நீட் தேர்வு மதிப்பெண் கணக்கிடுவதில் எத்தகைய நடைமுறைப் பின்பற்றப்பட உள்ளது என்பது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசு நாளை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.