தமிழ்நாடு

தொலைக்காட்சி சின்னம்: புதிய தமிழகம் கட்சி கோரிக்கையை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தொலைக்காட்சி சின்னம்: புதிய தமிழகம் கட்சி கோரிக்கையை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

webteam

உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரிய மனுவை பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத கட்சியாக, தமிழகத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது. அங்கீகாரம் பெறாத கட்சிகள் தேர்தலில் போட்டியிடும்போது, ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படுகிறது.

இதனால், உரிய அங்கீகாரம் மக்களிடம் இருந்து கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், எங்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொலைக்காட்சி பெட்டி சின்னத்தை , உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரே சின்னம் ஒதுக்க கோரி, அக்கட்சி தலைவர் மாநில தேர்தல் ஆணையத்தில் அளித்த கோரிக்கையை பரிசீலித்து, முடிவை மனுதாரருக்கு தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.