தமிழ்நாடு

விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனரா..?: விசாரிக்க உத்தரவு

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த இருவர் மிரட்டப்பட்டனரா என விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தான் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது மனுவை முன்மொழிந்த சுமதி, தீபக் ஆகியோர் கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டதாக விஷால் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மிரட்டப்பட்டது தொடர்பாக ஆடியோ ஆதாரம் ஒன்றினையும் அந்த நேரத்தில் விஷால் வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை ‌பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன், சென்னை மாநகர காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். ஆனால் தன் புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி தேவராஜன் உயர்நீதிமன்றத்தை நாடினார். அந்த மனு நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தவிட்டார்.