தமிழ்நாடு

100 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்ற அறிவிப்பு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

100 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்ற அறிவிப்பு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

Sinekadhara

நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

காஞ்சிபுரம் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பல் மருத்துவர் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எக்ஸ்பிரஸ் மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனத்தின் வேகம் அதிகரித்து மத்திய அரசு 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், இது உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதற்கு சமம் என்றும், எனவே இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறி சாலை மேம்பாடு, என்ஜின் செயல்பாட்டை அதிகரிக்க வேகம் அதிகரிக்கப்பட்டதாக அரசு கூறிய விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் வாகனங்களுக்கு 60 முதல் 100 கி.மீ வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.