தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: குடியரசுத்தலைவர் ஆணை

JustinDurai

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்கறிஞர்கள் சுந்தர் மோகன் மற்றும் கே. குமரேஷ் பாபு ஆகியோரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த  என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பரிந்துரைத்தது.

அவர்களில் முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து, அவர்கள் பதவியேற்றனர்.

இந்நிலையில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58ஆக உயர்ந்து, காலியிடங்கள் 17ஆக குறைய உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒதுக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75ஆகும்.

இதையும் படிக்கலாம்: கைது செய்யப்படுகிறாரா கார்த்தி சிதம்பரம்? - முன் பிணை கோரி தொடர்ந்த மனு தள்ளுபடி