தமிழ்நாடு

சிறுவர்களை கைது செய்யக் கூடாது: உயர்நீதிமன்றம்

சிறுவர்களை கைது செய்யக் கூடாது: உயர்நீதிமன்றம்

webteam

வழக்குகளில் சிக்கும் இளம் சிறார்களை கைது செய்ய முடியாது என்பதால், அவர்கள் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

சென்னை ஏழுகிணறு காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றில், தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் ஒரு சிறுவன், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளான். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர், இளம் சிறார்களுக்கான சட்டத்தில் சிறுவர்களை கைது செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதால், அவர்கள் முன் ஜாமீன் கோர தேவையில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர்.

இளம் சிறார்களுக்கான சட்டத்தில் கைது என்ற சொல்லுக்கு பதிலாக, பிடித்தல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், கைது செய்யும் அதிகாரத்தை வழங்க சட்டத்தை உருவாக்கியவர்கள் விரும்பவில்லை எனத் தெரிவித்தனர்.