கோவையில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கோவையில் சொத்துவரியை உயர்த்தி மாநகராட்சி உத்தரவிட்டது. இதனைக் கண்டித்து வரும் 27-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கும், மறியல் போராட்டத்திற்கும் திமுக கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதனிடையே திமுக கூட்டணியின் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியின் போராட்டத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுபடியே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராடுவது சட்டவிரோதம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.