தமிழ்நாடு

மதுபான கடை திறப்புக்கு தடை கோரிய வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

webteam

குடியிருப்பு பகுதி அருகே மதுபான கடை திறக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மதுபான கடை திறக்கக் கூடாது என தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதுபோல குடியிருப்பு பகுதி‌ அருகிலும் மதுபான கடை திறக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு குடியிருப்பு பகுதி அருகே மதுபானக் கடை திறக்கக் கூடாது என விதிகள் இல்லை என்பதால் அதற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும் தடை விதிப்பதற்கான சட்டத்தையும் நீதிமன்றத்தால் இயற்ற முடியாது என்றும் அது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.